UC News

KTM Duke 790 பிரியர்களுக்கு இந்த வருடமும் ஏமாற்றம் தான்

KTM Duke 790 பிரியர்களுக்கு இந்த வருடமும் ஏமாற்றம் தான்
Third party image reference

KTM Duke 790 மாடல் பைக் இந்த வருடம் இந்தியாவில் அறிமுகப்படுத்தபடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் தள்ளிப்போயுள்ளது.

மிலன் நகரில் கடந்த ஆண்டு நடந்த பைக் கண்காட்சியில் KTM Duke 790 மாடல் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இந்த வருடம் அறிமுகப்படுத்தபடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உறுதியளிப்பு சான்றிதழ் பெறுவதில் தாமதமானதால் இந்த வருடமும் தள்ளிப்போயுள்ளது. சர்வதேச அளவில் KTM Duke 790 பைக் அறிமுகமாகியிருந்தாலும், இந்தியாவிற்கு மட்டும் ஒரு ஆண்டு தாமதமாகும் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்பட்டதால், இந்தியாவில் இந்த மாடலக்கான புக்கிங் ஏற்கனவே சில நகரங்களில் செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.30,000 கொண்டு முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களிடம் KTM நிர்வாகம் மன்னிப்பு கேட்டு வருகிறது.

Topic:
READ SOURCE
Open UCNews to Read More Articles